தேடல்
தொலைப்பதை தேடுவதும் தேடுவதை காணுவதும் காணுவதை கவர்வதும் காலமெல்லாம் வாடிக்கை .
எதை தொலைத்தோம்......எதை தேடினோம் .....எதை கண்டோம்........எதை கவர்ந்தோம் என்பதில் தான் சுவாரசியம்.......அதுவே வாழ்க்கையும் கூட .
சிதறவிட்ட சிந்தனைகளை தேடியறியும் தேடலாய் உதிக்கிறது என் வலைப்பூ.......
Tuesday, 29 June 2010
Sunday, 27 June 2010
தேடல்... ஆரம்பம்...
தேடல் என்பதுதான் என்ன .........
தொலைத்ததை தேடுவதா
அறியாத புரியாத புதிர் ஒன்றை ஆராய்வதா......
அதன் ஆழம் தான் என்ன ...
அடிமனத்தின் ஆழம் இருக்குமா
அறியாத முடிவிலி தூரம் தான் நீளுமா
கடலை விட பரந்ததா இந்த தேடல்
தேடியது சிலவும் தேடாதது பலவுமிருக்க
கடலில் தேடுவது கயல்விழி மீன்களையா
காற்றில் தேடுவது அதில் கலந்த உன் சுவாசத்தையா
இரவில் தேடுவது இனிய நிலவொளியா
இமயத்தில் தேடுவது இடைவிடா இறையருளா
கடலில் தொலைத்தால் கூட தேடிவிடலாம் சுழியோடி ....
காற்றில் தொலைக்கிறேன் சிந்தனையை பல கேள்விகளுடன்...
மீண்டும் தேடுவதற்காய் ......
தேடலுடன்
நான்....
Subscribe to:
Posts (Atom)
