தேடல்

தொலைப்பதை தேடுவதும் தேடுவதை காணுவதும் காணுவதை கவர்வதும் காலமெல்லாம் வாடிக்கை .
எதை தொலைத்தோம்......எதை தேடினோம் .....எதை கண்டோம்........எதை கவர்ந்தோம் என்பதில் தான் சுவாரசியம்.......அதுவே வாழ்க்கையும் கூட .
சிதறவிட்ட சிந்தனைகளை தேடியறியும் தேடலாய் உதிக்கிறது என் வலைப்பூ.......

Monday, 19 July 2010

உன்னுடன் தேநீர்....



எனக்கும் உனக்கும் மட்டுமேயான உலகில்
ஒரு கோப்பையில் இருவர் பருகும் பொழுதில் என் உயிருக்குள் நுழைந்து உதிரத்தில் கலந்ததுபோல் நீ போடும் தேநீரில் கூட தேயிலையாய் சீனியாய் அதன் மேல் எழும் நுரையாய் கலந்துள்ளது என் மேல் நீ கொண்ட காதல் .....

Saturday, 17 July 2010

என்னில் அவள்......


காரிருளில் கரம்பற்றி நடந்தவளா
கண்களினால்''கண்ணாளனே''என்றவளா
பேச்சிலே ராகங்கள் இசைப்பவளா
என் எழுத்திலே மையாக ஊறியவளா
நெஞ்சில் பனித்துளியாய் படிந்தவளா
என்னில் உயிராய் உறைந்தவளா
என் வாழ்வில் வந்த இனியவளா
என்னிலே ஒரு பாகம் இனி - அவளா...